செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (11:58 IST)

சில்மி‌ஷ சாமியார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த பொறியியல் மாணவி

கேரளாவில் பொறியியல் மாணவி ஒருவர் ரயிலில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துள்ளார்.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகள் முதல் பெண்களுக்கு வரை பாதுபாப்பில்லா நாடாக இந்தியா மாறி வருகிறது. இதற்கு இந்தியாவில் நடைபெற்று வரும் பல்வேறு கற்பழிப்பு சம்பவங்களே சான்றாகும்.
 
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து குருவாயூருக்கு செல்லும் பெண்கள் பெட்டியில் சாமியார் ஒருவர் ஏறியுள்ளார். இதற்கு பெட்டியில் இருந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவரோ நான் ஒரு சாமியார் என்று கூறி பெண்களின் அருகே அமர்ந்துகொண்டார்.
 
தொடர்ந்து அந்த சாமியார் தனது சில்மிஷ வேலைகளை, பெண்களிடம் காண்பித்துள்ளார். அங்கு இருந்த பொறியியல் மாணவி தனது பையில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து சில்மிஷ சாமியாரின் முகத்தில் அடித்துள்ளார். எரிச்சல் தாங்க முடியாத சாமியார் கண்ணைக் கசக்கிக் கொண்டு அலறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாணவி, சில்மிஷ சாமியாரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். வீர செயலில் ஈடுபட்ட மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.