1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (09:00 IST)

ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட 9 நாள் குழந்தையை கடித்துக் கொன்ற எலி?

ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை எலி கடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை எலி, நாய் போன்ற விலங்குகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 
 
சமீபத்தில் மும்பை அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி கோமாவில் இருந்த பர்மிந்தர் குப்தா(27) என்ற இளைஞனை எலி கடித்ததில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதே போல் பீகாரில் தெரு நாய் ஒன்று  ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்து நோயாளியின் காலை கவ்விச் சென்றது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே இன்னொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
பிகாரில் பூரன் நீலம் என்ற ஜோடியினருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முன்பு குழந்தை பிறந்துள்ளது. நீலம் தர்பங்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குழந்தை உடல்நிலை சரியில்லாததால்  ஐசியுவில் அட்மிட் செய்துள்ளனர்.
 
குழந்தையை பார்க்க சென்ற பெற்றோருக்கு பேரதிர்ச்சி. குழந்தை கை கால்களில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகமும் எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது.
 
எலி கடித்ததால் தான் குழந்தை இறந்துவிட்டது என பெற்றோர் கூறிய குற்றச்சாட்டை மறுத்த மருத்துவமனை நிர்வாகம், குழந்தையை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்துவிட்டதாக விளக்கமளித்துள்ளது.