வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2024 (10:08 IST)

9 வயது சிறுமியை வன்கொடுமை செய்து சாலையில் வீசிய கொடூரம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிராவில் 9 வயது சிறுமியை கும்பல் ஒன்று கடத்தி வன்கொடுமை செய்து சாலையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சமீபமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறான ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

 

மகாராஷ்டிராவின் ஜல்னா பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதை அறிந்துக் கொண்ட அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவன் தனது கூட்டாளிகள் உதவியுடன் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தியுள்ளான். சிறுமியை வன்கொடுமை செய்த அவர்கள் சாந்தாஞ்ஹிரா சாலையில் இரவு 11 மணி அளவில் சிறுமியை வீசிச் சென்றுள்ளனர்.

 

அப்பகுதியை சேர்ந்த சிலர் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறுமிக்கு நடந்த இந்த கொடூரத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K