1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (20:24 IST)

பெங்களூருவில் நீர் நிலைகளை ஆக்கிரமித்த 980 கட்டிடங்கள் இடிக்கப்படும்: அமைச்சர் ஆர்.அசோக்

Bangalore
பெங்களூரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்படும் என மாநில அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் பெங்களூரில் வரலாறு காணாத மழை பெய்ததை அடுத்து நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோடிக்கணக்கான மதிப்புள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளும் வெள்ளத்தில் இருந்து தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் அமைச்சர் ஆர்.அசோக் செய்தியாளர்களை சந்தித்தபோது பெங்களூரில் 980 கட்டிடங்கள் சட்டவிரோதமாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது என்றும் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களும் இடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
பெங்களூரில் சுமார் 40 ஐடி நிறுவனங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டி உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் நொய்டா இரட்டை கோபுரம் போன்று பாரபட்சமின்றி எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்