1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (12:22 IST)

வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூர் மக்கள், மசால் தோசை சாப்பிட்ட வீடியோவை வெளியிட்ட எம்பி!

Tejaswi Surya
பெங்களூரு நகரம் வெள்ளத்தால் சர்க்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெங்களூரு எம்பி மசால் தோசை சாப்பிடும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
பெங்களூரு தெற்கு தொகுதி எம்பி ஆக இருப்பவர் தேஜஸ்வி சூர்யா. இவர் தனது சமூக வலைத்தளத்தில் மசால் தோசை சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். பெங்களூரு நகரம் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதும் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெங்களூர் எம்பியாக தனது பணியை செய்யாமல் மசால் தோசை சாப்பிடும் வீடியோவை வெளியிட்டதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நடிகை ரம்யா தனது கடும் கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.