பெங்களூரு வெள்ள நிவாரண நிதி: ரூ.300 கோடி ஒதுக்கியதாக முதல்வர் அறிவிப்பு!
பெங்களூரில் ஏற்பட்ட கனமழை காரணமாக வெள்ள நிவாரண நிதியாக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும் அதனால் ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர் பணிக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் பெங்களூர் வெள்ள நிவாரணத்திற்காக கர்நாடக அரசு 300 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெள்ள நிலைமை ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
பெங்களூரு நகர மற்றும் புறநகர சாலைகள், மின் கம்பங்கள் மற்றும் சேதமடைந்த பள்ளிகள் ஆகியவைகளின் பணிகளுக்காகவும், உள்கட்டமைப்புகளை மீட்டெடுக்கவும் 300 கோடி ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது
மேலும் பெங்களூரில் மழை நீர் வடிகால் அமைக்க ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார் இயல்பை விட 150 சதவீதம் அதிக மழை பெய்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.