ஒமைக்ரான்: 91% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு!!
ஒமைக்ரானால் பாதிகப்பட்ட 91% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு பரவி வருகிறது என்பதும் படிப்படியாக பரவிய இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது 17 மாநிலங்களில் பரவி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் தற்போது 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாகவும், மூன்று பேர் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஏழு சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போடவில்லை. மேலும், 70% ஒமைக்ரான் பாதிப்புகள் அறிகுறியற்றவை என்றும் 30% வழக்குகளில் அறிகுறிகள் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.