புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (12:00 IST)

நாடு திரும்பும் 85 இந்தியர்கள் - ஆப்கான் அப்டேட்!

தலிபான்கள் வசம் உள்ள ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளார். 
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதை தொடர்ந்து அங்கு நிலையான ஆட்சி அமைவது குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.
 
இதனிடையே ஆப்கன் நாட்டை தற்போது தாலிபான்கள் ஆக்கிரமித்து தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர். 
 
அந்த வகையில் இந்தியாவும் அங்கிருக்கும் இந்தியர்களை நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். தலிபான்கள் வசம் உள்ள ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளார். இந்திய விமானப்படை c-130j மூலம் 85 பேரும் தயக்கம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.