தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தம்! – தலீபான்களால் வர்த்தகம் பாதிப்பு!
- ஆப்கனில் தாலிபன்களுடன் இந்தியா பேச்சு நடத்துகிறதா?
- தாலிபான்கள் மீதான தடையை விலக்க முடியாது: ஃபேஸ்புக் திட்டவட்டம்!
- ஜோ பைடன்: ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு மத்தியில் சிக்கியிருக்கும் அமெரிக்கர்களை மீட்கும் வரை படைகள் தங்கியிருக்கும்
- தாலிபன்கள் பாகிஸ்தானுக்குள் வருவதைத் தடுக்க முயற்சி
நாட்டை பிடிச்சாலும் ஆயுதங்கள் மிச்சமிருக்கு..! – தலீபான்கள் வீடியோவை கண்டு அதிர்ந்த நாடுகள்!
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் தங்களிடமுள்ள ஆயுதங்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் ஆப்கன் ராணுவத்தை வீழ்த்தி தலீபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். தலீபான்கள் நாட்டை பிடித்த நிலையில் சீனா, ரஷ்யா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும் தலீபான்கள் தலைமையிலான ஆப்கன் ஆட்சிக்கு பரிந்துரைப்பது குறித்து உலக நாடுகள், ஐ.நா சபை தீவிர ஆலோசனையில் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் தங்களிடம் உள்ள ஆயுத இருப்பை காட்டும் வகையில் தலீபான்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் சாரை சாரையாக துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதோடு, பெட்டி பெட்டியாக கையெறி குண்டுகள், பஸூக்கா போன்ற ராக்கெட் லாஞ்சர்களையும் வைத்துள்ளனர். இவ்வளவு ஆயுதங்கள் தலீபான்களிடம் இருப்பது அண்டை நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
