செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (15:21 IST)

தடுப்பூசியால் அதிசயம் - மூதாட்டிக்கு பார்வை கிடைத்தது!!

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவுடன் கண்பார்வை மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாட்டிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது.

 
தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பக்க விளைவுகள் வருவது வழக்கம். ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டிக்கு தடுப்பூசி போட்ட பிறகு கண் பார்வை வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த மூதாட்டிக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டதால், இரு கண்பார்வையும் இழந்துள்ளார். இதனிடையே கொரோனாவில் பாதுகாத்துக்கொள்ள மூதாட்டி கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். மூதாட்டிக்கு தடுப்பூசி போட்டவுடன் கண்பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளது.