புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (11:30 IST)

ஹிமாச்சல் முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் காலமானார்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 87.
 
இன்று காலை 3.40 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக ஷிம்லா இந்திரா காந்தி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜனக் ராஜ் தெரிவித்தார். திங்கள்கிழமையன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 
9 முறை எம்எல்ஏவாகவும் 5 முறை எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டவர் வீர்பத்ர சிங். ஆறு முறை ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார் அவருக்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து அவர் மீண்டிருந்தாலும் அவரது உடல் நிலையில் தொடர் பாதிப்புகள் தென்பட்டன.