திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (07:43 IST)

அஜித் பவார் அணியில் இணைந்த மேலும் சில எம்.எல்.ஏக்கள்.. சரத்பவாருக்கு பின்னடைவா?

அஜித் பவார் தலைமையில் சில எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணியில் சமீபத்தில் இணைந்தனர் என்பதும் அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் அஜித் பவார் அணியில் நாகலாந்து என்சிபி எம்எல்ஏக்கள் இணைந்துள்ளதால் சரத் பவார் அணிக்கு மேலும் பின்னடைவு என்று கூறப்படுகிறது.  
 
நாகலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்கள் அஜித் பவார் அணிக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நாகலாந்தில் மொத்தமே ஏழு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக அஜித் பவார்  பக்கம் அவர்கள் சென்றிருப்பது சரத் பவார் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் அஜித் பவார் அணியின் கை ஓங்கிக் கொண்டே இருக்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியே அவரிடம் சென்று விடும் என்று மகாராஷ்டிரா மாநில அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்..
 
Edited by Siva