மகாராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சல் - 7 பேர் பலி!
மகாராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 142 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவோடு பன்றிக் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதுவரை 142 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கபப்ட்டுள்ளது, இதில் மும்பையில் 43 பேருக்கும், புனேவில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஏழு நோயாளிகள் இறந்துள்ளனர். நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்க, மக்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அதோடு கொரோனா, குரங்கு அம்மை தொற்றுகளில் இருந்தும் காத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.