இன்று முதல் தமிழகத்தின் 19 நகரங்களில் 5ஜி சேவை: ஜியோ அறிவிப்பு
இன்று முதல் தமிழகத்தில் உள்ள 19 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 19 நகரங்கள் உள்பட இந்தியாவின் 34 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை வழங்கி உள்ளது.
தமிழகத்தில் கடலூர் திண்டுக்கல் காந்திபுரம் கரூர் கும்பகோணம் தஞ்சாவூர் திருவண்ணாமலை உள்பட 19 நகரங்களில் 5ஜி சேவை இன்று முதல் ஆரம்பம் என்றும் இதுவரை இந்தியாவில் 225 நகரங்களில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் 5ஜி சேவை வழங்கப்படும் என ஜியோ உறுதி அளித்துள்ளது
Edited by Siva