1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (10:43 IST)

57,000 இந்தியர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்: அதிர்ச்சி காரணம்!

twitter
57,000  இந்தியர்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒருசில காரணங்களால் உலகம் முழுவதும் டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் சமீபத்தில் கூட ஒரு இந்தியர்களின் பல ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை பரப்புவதாக 57 ஆயிரம் இந்தியர்களின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
குழந்தைகளின் ஆபாச படங்கள் டுவிட்டர் தளத்தில் பரப்புவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி டுவிட்டர் இந்தியா கொள்கை தலைவர் மற்றும் டெல்லி காவல் துறையுடன் டெல்லி பெண்க ஆணையம்ஆலோசனை நடத்தியது
 
இந்த ஆலோசனையை அடுத்து இதுகுறித்து டுவிட்டர் நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் 57 ஆயிரம் இந்தியர்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 

Edited by Mahendran