1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (07:40 IST)

உலகின் பல பகுதிகளில் திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்: பயனர்கள் அதிருப்தி

Instagram
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம் என்பதும் இதில் பல திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் கணக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் இணையதளம் திடீரென உலகம் முழுவதும் முடங்கியதாகவும் இதனால் பயனர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 11.45 மணிக்கு திடீரென இன்ஸ்டாகிராம் முடங்கியது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் இன்ஸ்டாகிராம் சேவை கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள
 
இந்த  நிலையில் இன்ஸ்டாகிராம் முடங்கியதற்கு என்ன காரணம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் இனிமேல் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.