1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (11:29 IST)

78 செய்தி சேனல்கள் உள்பட 560 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு

youtube
78 செய்தி சேனல்கள் உள்பட மொத்தம் 560 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார் 
 
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி மொத்தம் 560 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் 78 செய்தி சேனல்கள் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமான பதில் ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 78 செய்தி சேனல் உள்பட 560 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு உள்ளடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2010ன்படி அனுமதி வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்