திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2022 (07:57 IST)

குடியரசு தலைவர் தேர்தல்: 53 செல்லாத வாக்குகளில் ஒன்று தமிழக செல்லாத வாக்கு!

votes
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு அவர்கள் வெற்றி பெற்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் . இதனையடுத்து அவர் 15 ஆவது குடியரசுத் தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்பார் என கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த 17 எம்பிக்கள் மற்றும் 104 எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அதேபோல் குடியரசுத் தலைவர் தேர்தலில் 53 செல்லாத வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது ஒரு பெரிய  வருத்தத்திற்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த 53 செல்லாத வாக்குகளில் ஒன்று தமிழகத்தில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது
 
குடியரசுத் தலைவர் தேர்தலில் 53 பேர் செல்லாத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது