ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (16:31 IST)

5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் தேதி வெளியிடப்பட்டுள்ளது. 

 
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வெளியிட்டார். 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
உத்தரபிரதேசம்:
உத்தரபிரதேச மாநிலத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். பிப்ரவரி 10, பிப்ரவரி 14,  பிப்ரவரி 20, பிப்ரவரி 23, பிப்ரவரி 27, மார்ச் 3, மார்ச் 7, 
 
மணிப்பூர்:
மணிப்பூர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 3. 
 
பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மார்ச் 10. 
 
மேலும் இது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளதாவது, கெராோனா, ஒமைக்ரான் பரவும் சூழலில் தேர்தல் நடத்துவது மிகவும் சவாலானது. கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை. 
 
5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேட்பாளர்கள் ஆன்லைன் முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.