1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (14:32 IST)

சதீஷ் நடிக்கும் நாய் சேகர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் நாய் சேகர் படம் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது.

சதீஷ் நடித்த ‘நாய்சேகர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பொங்கலுக்கு பிறகு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த வலிமை பின் வாங்கியதால் பல சிறிய பட்ஜெட் படங்கள் இப்போது ரிலீஸுக்கு களமிறங்கியுள்ளன. அந்த வகையில் நாய் சேகர் படத்தின் ரிலீஸும் பொங்கல் பண்டிகைக்கு இறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தோடு விஷாலின் வீரமே வாகை சூடும், ஐஸ்வர்யா முருகன் மற்றும் விதார்த்தின் கார்பன் ஆகிய படங்களும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.