1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (13:19 IST)

ஓடிடியில் ‘புஷ்பா’ ரிலீஸ் ஆகும் தேதி அறிவிப்பு!

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா நடிப்பில் உருவான ‘புஷ்பா’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அமேசான் ஓடிடியில் ‘புஷ்பா’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 7ஆம் தேதி ‘புஷ்பா’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் மட்டும் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்றும் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது