திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (12:54 IST)

வில் வடிவத்தில் தோன்றும் 5 கிரகங்கள்; வானவியல் அதிசயம்! – எப்போது பார்க்கலாம்?

Planets
வானில் நடக்கும் அதிசய வானவியல் நிகழ்வுகளில் ஒன்றான 5 கிரகங்களின் ஒருங்கிணைப்பு விரைவில் நடக்க உள்ளதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் பல்வேறு நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்கற்கள் சுற்றி வரும் நிலையில் மிகவும் அரிதான சில வானியல் நிகழ்வுகளும் அவ்வபோது நடைபெறுகின்றன. சூரிய குடும்பத்தில் பூமியை போன்றே பெரியதும், சிறியதுமான 9 கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றின் சுற்றுவட்ட பாதையை பொறுத்து சுழலும் காலமும் மாறுபடும். இதனால் வெகு அரிதாகவே இந்த கிரங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன.

அவ்வாறாக சூரிய குடும்பத்தின் பிரதான கிரகங்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் யுரேனஸ் ஆகிய 5 கிரகங்களும் பூமிக்கு அருகில் தோன்றும் வானவியல் நிகழ்வு நடக்க உள்ளது. மார்ச் 28ம் தேதி நடைபெறும் இந்த வானியல் நிகழ்வின்போது 5 கிரகங்களும் வில் வடிவத்தில் வளைகோட்டு பாதையில் காட்சியளிக்கும். இந்த வானவியல் நிகழ்வை வெறும் கண்களால் மாலை நேரத்திற்கு பின்னர் காண முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K