1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 மே 2018 (13:01 IST)

உபி: கடுகு எண்ணையால் பரவும் நோயால் 4 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கடுகு எண்ணையால் பரவும் மர்ம நோயால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
 
கடந்த 2005ம் ஆண்டு உபியில் டிராப்சி என்ற நீர்க்கோவை நோய் ஒன்று பரவலாக அங்கு பரவி வந்தது . இந்த நோயால் 75 பேர் அப்போது உயிரிழந்தனர். கலப்படம் செய்யப்பட்ட கடுகு என்ணையை உபேயாக படுத்துவதன் மூலம் இந்நோய் மனிதர்களை தாக்கியது. 
 
இந்நிலையில் தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நோய் மீண்டும் பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு உபி மாநிலத்தின் ஜனுப்பூர் பகுதியில் வசித்து வரும் அசோக் குமார் என்பவரின் மனைவி மரணமடைந்தார்.
 
இதையடுத்து, அவரது மருமகளும், 2 மகன்களும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தற்போது அவரது பேத்தியும் மருத்துவமனையில் டிராப்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்