1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 மே 2018 (17:45 IST)

திரிபுராவில் கனமழையால் நிலச்சரிவு: 4 பேர் பலி

திரிபுராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
 
வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் திரிபுரா மாநிலத்தில் பெய்து வந்த கனமழையால் அங்குள்ள பல்வேறு தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேவேலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் சேறு மற்றும் மண் சரிந்து மூடியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்நிலையில், அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைவில் நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த ஆய்வின் போது முதல்வருடன் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்