திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2024 (08:44 IST)

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்.. மிகப்பெரிய குடும்பத்தை கவர அரசியல் கட்சிகள் போட்டி..!

அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் இருப்பதை அடுத்து அந்த குடும்பத்தின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட வாக்கு பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்பதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தேர்தல் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள புலாகுரி நேபாளி பாம்  என்ற பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இதில் ஒரு குடும்பத்தில் மட்டும் 350 வாக்காளர்கள் இருப்பதாக தெரிகிறது. 54 ஆண்டுகளுக்கு மேல் கிராம தலைவராக இருக்கும் ராம் பகதூர் என்ற குடும்பத்தில் தான் 350 வாக்காளர்கள் உள்ளன

இவருக்கு ஐந்து மனைவிகள், 12 மகன்கள் மற்றும் ஒன்பது மகள்கள் உள்ளதாகவும் 56 பேரக்குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த குடும்பத்தில் உள்ள சிலர் நன்றாக படித்து பல மாநிலங்களில் வேலை செய்து வருவதாகவும் ஓட்டு போடுவதற்காக தற்போது அனைவரும் வீட்டிற்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது

சுமார் 350 வாக்காளர்கள் உள்ள மிகப்பெரிய குடும்பம் என்ற பெயர் பெற்றுள்ள இந்த குடும்பத்தின் ஆதரவை பெற அரசியல் கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

Edited by Siva