1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஜூலை 2024 (12:19 IST)

லிவ்-இன்-டுகெதர் முறைக்கு தடை.. 300 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அதிரடி அறிவிப்பு..!

ஹரியானா மாநிலத்தில் 300 கிராமத்து பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்று திரண்டு திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்வதற்கு தடை என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த கூட்டத்திற்கு பின்னால் செய்தியாளர்கள் பேசிய பஞ்சாயத்து தலைவர் ஒருவர் ’நாங்கள் காதல் திருமணத்திற்கு எதிரி கிடையாது, ஆனால் அதே நேரத்தில் திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் வாழ்வதை கடுமையாக கண்டிக்கிறோம், அதேபோல் காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர்களின் சம்பந்தத்துடன் திருமணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
 
திருமணம் செய்யாமல் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்வதற்கு அரசு அனுமதி அளித்ததுள்ளதாகவும் ஆனால் இதை எதிர்த்து நாங்கள் பிரதமர் மோடியுடன் பேசுவோம் என்றும் எதிர்க்கட்சி தலைவரிடம் பேசுவோம் என்றும் இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் திருமணம் செய்யாமல் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழும் தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran