ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (16:59 IST)

திருப்பதியில் 3 மாத குழந்தை கடத்தல்: ஒரே நாளில் மீட்ட போலீசார்

திருப்பதியில் தங்கி வியாபாரம் செய்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை நேற்றிரவு திடீரென காணாமல் போனது. குழந்தையை அருகில் வைத்து கொண்டு அதன் பெற்றோர் தூங்கிய நிலையில் மர்ம நபர் அந்த குழந்தையை கடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது
 
இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது ஒரு மர்ம நபர் அந்த தம்பதியின் குழந்தையை தூக்கி கொண்டு சென்றது தெரிய வந்தது.
 
இதனையடுத்து குழந்தையை கடத்திய நபரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை செய்த நிலையில் சற்றுமுன் காணாமல் போன குழந்தை மீட்கப்படது. 
 
திருமலையில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக பணிபுரிந்த பெண், குழந்தையை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. துப்புரவு பணி செய்யும் பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்ததுடன், துப்புரணி பணிசெய்யும் பெண்ணிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.