திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 4 மார்ச் 2020 (13:38 IST)

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதனிடையே டெல்லியில் ஒருவருக்கும், ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

அதே போல் இத்தாலியில் இருந்து வந்த 16 பேருக்கும், அவர்களீன் டிரைவரான ஒருவருக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் தெலுங்கானாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.