கூடுதலாக 24 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு; எடியூரப்பா நம்பிக்கை
இன்னும் 24 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக தனக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக பதவியேற்க நேற்று இரவு ஆளுநர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி 15 நட்களுக்குள் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நேற்று நள்ளிரவு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. ஆனால் எடியூரப்பா பதிவியேற்புக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் இன்று காலை எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எங்களிடம் 104 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. ஆதரவாக இருக்கிறார். சட்டமன்றத்தில் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று நம்பிக்கை உள்ளது. இன்னும் 24 எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிபடியும் மக்கள் தீர்ப்புக்கு ஏற்பவும் வாக்களிப்பார்கள்.