1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (17:45 IST)

ஹரியானாவில் வெற்றி பெற்ற 2 சுயேட்சைகள் யாருக்கு ஆதரவு? பரபரப்பு தகவல்..!

"சமீபத்தில் நடந்த ஹரியானா மாநில தேர்தலில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், அவர்கள் இருவருமே பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது என்பதும், அந்தக் கட்சி 48 இடங்களில் வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த தேர்தலில் இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர்:  ராஜேஷ் மற்றும் சாவித்திரி ஜிண்டால் ஆகிய 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.

ஏற்கனவே 48 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு, இப்போது 50 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்களுக்கும், ஹரியானா மாநில மந்திரிசபையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

Edited by Mahendran