வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (08:43 IST)

தொல் திருமாவளவன்  நடத்திய மாநாடு ஒரு போலி மது ஒழிப்பு மாநாடு- பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சனம்....

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள திருவாய்மூரில் பிரசித்தி பெற்ற சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றான திருவாய்மூர் தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு 
பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து  சுவாமி தரிசனம் செய்தார்.
 
தொடர்ந்து  அவர்   அளித்த  பேட்டியில் கூறியதாவது:
 
மத்திய அரசு போதிய பணம் வழங்குகிறது. அதாவது SSA SCHEME யை‌ பொறுத்த வரை 
மாநில அரசு எந்த அளவுக்கு செலவு செய்கிறதோ அதைவிட அதிகமான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் அடிப்படையில் காலை உணவு திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
 
இங்கு நடக்கும் அத்தனை செலவிற்கும் பணம் மத்திய அரசு வழங்குகிறது ஆனால் அதனை முறையாக மாநில அரசு செய்யாமல் மக்களை வஞ்சிறது.
 
உதாரணமாக பட்டியல் சமூக மக்களுக்காக மற்றும்  பழங்குடியின சமூக மக்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியில்தான்  மகளிர் உரிமை தொகைக்கான குடும்பத் தலைவிக்கு ரூ.1000 பணம் வழங்கப்படுகிறது.
 
இதை ஓட்டிற்கான ஒரே மெக்கானிசமாக மாநில அரசு மாற்றுவதாக அவர் குற்றம் காட்டினார். 
 
அண்மையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு.....
 
அது ஒரு போலி மது ஒழிப்பு மாநாடு.தொல் திருமாவளவன் அவர்கள் நடத்திய மாநாடு மது ஒழிப்பு மாநாடு அல்ல.அது ஒரு அரசியல் அழுத்த மாநாடு. வேண்டுமென்றால் உளுந்தூர்பேட்டை மாநாடு என்று சொன்னால் எங்கள் ஊர் அதில் பேமஸ் ஆகட்டும். மது ஒழிப்பு மாநாடு என மட்டும் சொல்லாதீர்கள் ஏனென்றால் திருமாவளவன் அங்கு மது ஒழிப்பு பற்றி பேசவில்லை என கடுமையாக விமர்சித்தார். 
 
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளது குறித்த கேள்விக்கு....
 
திராவிட மாடல் என்றாலே என்னை பொறுத்தவரை திராவிட மாடல் பேய் ஆட்சி. மக்களை எறும்புகளாகவும் புழுக்களாகவும் நசுக்குகின்ற நயவஞ்சக பேய்  ஆட்சி திராவிட மாடல் பேய் ஆட்சி. மக்களுக்கான எந்தத் திட்டமும் கிடையாது மக்களை  ஏமாற்றுகின்ற  வஞ்சிக்கின்ற
சாராயம் விற்று சம்பாதித்த ஆட்சி என விமர்சித்தார்.
 
யார் எந்த நாற்காலியில் அமர்ந்தால் என்ன இவருக்கு அடுத்து இவரது மகன் இன்பநதி.அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களை நாங்கள் கொத்தடிமை என சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம் என சொல்லி வருகிறார்கள். இந்தச் சூழலில் மக்கள் இந்த ஆட்சி எப்போது முடியும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் மற்றும் கடல் கொள்ளையர்களின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை குறித்த கேள்விக்கு....
 
மத்திய அரசின் தீவிரம் முயற்சியால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளார்கள். 
இலங்கை நாட்டு நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி.ஏற்கனவே மீனவர்கள் படுகொலை என்ற செய்தி அடிக்கடி வரும் ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி வரவில்லை. மீனவர்கள் நலல்களில் அக்கறை கொண்ட அரசு ராஜு பாய் அரசு அதற்குப் பிறகு நரேந்திர மோடி அரசு என  அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை அரசால்  பறிமுதல் செய்யப்படும் படகுகள் முழுமையாக மீட்டுக் கொண்டு வர வேண்டும். 
 
அதற்கான நிரந்தர தீர்வு எடுக்கப்படும்.மத்திய ரயில்வே துறை அமைச்சரை அடுத்த முறை சந்திக்கும் போது நாகை- திருத்துறைப்பூண்டி ரயில்வே திட்டப் பணிகள் குறித்து பேசுவதாக உறுதியளித்தார்.