வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:43 IST)

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு நாள் முதல்வராகும் 19 வயது மாணவி!

சர்வதேச பெண் குழந்தைகள் நாளை முன்னிட்டு இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 வயது மாணவி ஒருவர் முதல்வராக செயல்பட உள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தெளலத்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த சிருஷ்டி கோஸ்வாமி என்ற 19 வயது மாணவி இன்று ஒரு நாள் மட்டும் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு முதல்வராக பதவியேற்கவுள்ளார். இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து ஒரு நாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று மதியம் 12 மணி முதல் 3 மணிவரை அவர் முதல்வராக செயல்பட உள்ளார். அவர் இன்று முதல்வராக சில திட்டங்களை பார்வையிட உள்ளார். அப்போது உத்தரகாண்ட்டின் தற்போதைய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருப்பார் என சொல்லப்படுகிறது.