செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 ஜனவரி 2021 (08:16 IST)

நான் யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை… இசையமைப்பாளர் யுவன் அதிரடி அறிக்கை

தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா தன் தயாரிப்பு நிறுவனத்தில் யாருக்கும் பணப்பரிமாற்றம் செய்யும் அதிகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா U1 ரெக்கார்ட்ஸ் என்ற ஆடியோ நிறுவனத்தையும், யுவன் ஷங்கர் ராஜா எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்கள் மூலமாக பாடல்கள் வெளியீடு மற்றும் படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று யுவன் ‘எனது இரு நிறுவனங்களிலும் பணப்பரிமாற்றம் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக என்னைத் தவிர யாருக்கும் எந்த அதிகாரமும் அளிக்கவில்லை. அப்படி யாராவது செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.’ எனக் கூறியுள்ளார். யுவன் தயாரிப்பில் இப்போது மாமனிதன் மற்றும் ஆலிஸ் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன