திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 30 மார்ச் 2020 (23:59 IST)

தெலங்கானாவில் கொரோனாவில் இருந்து 13 பேர் மீண்டுள்ளனர்...

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளதுஇந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 748066 பேர் பாதிப்பட்டுள்ளனர்.35388 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வேலைகளுக்குச் செல்லாமல் வீடுகளில் தனித்து ஓய்வெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானாவில் 13 பேர் இன்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.அதேசமயம் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யபட்டுள்ளது. இதையடுத்து கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தெலங்கானாவில் 61 ஆக உயர்ந்துள்ளது.