வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூன் 2020 (20:41 IST)

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 120 பேர் உயிரிழப்பு: ஒரு லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 120 பேர் உயிரிழப்பு:
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக மிக அதிகமாக பரவி வருகிறது என்பது தெரிந்ததே. தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனா வைரஸின் பாதிப்பு மிக அதிகமாக பரவி வருவதால் அம்மாநிலத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 2259 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் ஒரே நாளில் அம்மாநிலத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் ஒரு அதிர்ச்சிக்குரிய செய்தியாகும் 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,787 ஆக உள்ளதாகவும் 3,289 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து 42,638  பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத் துறையினர் மிகத் தீவிரமாக செயல்பட்டு வந்த போதிலும் அதன் பாதிப்பு சற்றும் குறையாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது