டெல்லி முதல்வருக்கு கொரோனாவா? சோதனை முடிவின் விபரம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் கடந்த சில வாரங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது
இந்த நிலையில் திடீரென அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு கொரோனா தொற்றின் அறிகுறி இருப்பது போல் தென்படுவதால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. மேலும் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் முடிவு வந்துள்ளது. அந்த முடிவின்படி அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றும் அவருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
கடந்த 2 தினங்களாக லேசான காய்ச்சல் இருந்ததை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா இருக்க வாய்ப்பு உள்ளதாக வெளிவந்த செய்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது