திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (14:48 IST)

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி...

andra pradesh
ஆந்திர மாநிலம் பல்நாடு என்ற பகுதியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில்  சட்டெனப்பள்ளி மண்டலம், ராமகிருஷ்ணபுரம் குருகுல பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நேற்று மதியம் மாணவர்கள் வழக்கம் போல் உணவு சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு,  அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், மாணவர்களுக்கு அஜீரணக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது மாணவர்கள் உடல் நல சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.