1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (07:58 IST)

’மாஸ்டர்’ ஓடிடியில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

master ott
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13ஆம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் கடந்த ஒரு வருடமாக திரையரங்குக்கு வர பயந்து கொண்டிருந்த மக்களை திரையரங்குகளுக்கு வரவழைத்த என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடியும் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 100 கோடியும் வசூல் செய்ததாக இந்த படத்தின் வசூல் நிலவரங்கள் தெரிகின்றன. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் கூட்டம் குறைந்து உள்ள நிலையில் இந்த படத்தை ஓட்டிய ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்
 
ஏற்கனவே இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள அமேசான் நிறுவனம் வரும் 29-ஆம் தேதி இந்த படத்தை வெளியிட உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளது. ஒரு பெரிய ஸ்டாரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியில் வெளியாகுவது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளை அடுத்து ஓடிடியிலும் இந்த படம் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது