வெங்கட்பிரபுவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

venkat prabhu
வெங்கட்பிரபுவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ்
siva| Last Modified திங்கள், 25 ஜனவரி 2021 (13:24 IST)

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு தற்போது மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் என்பதும், சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வெங்கட் பிரபு கடந்த சில மாதங்களாக ’லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரை இயக்கி வந்தார் என்பது குறித்த செய்தியை அவ்வப்போது பார்த்தோம். காஜல் அகர்வால், வைபவ், ஆனந்தி உள்பட பலர் நடித்த இந்த தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இந்த தொடர் ஒளிபரப்பும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ’லைவ் டெலிகாஸ்ட்’ என்ற இந்த வெப்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பின்னர் காஜல் அகர்வாலின் முதல் திரைப்படம் வெளியாவதை அடுத்து அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :