1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (14:38 IST)

Amazon Great Republic Day Sale: ஸ்மார்ட்போன் மீது பலே சலுகை!!

இன்று முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை க்ரேட் ரிபப்ளிக் டே விற்பனை நடைபெறுகிறது.  

 
இந்தியாவில் ஆன்லைனில் பொருட்கள் விற்கும் அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அவ்வபோது விழாக்கால விற்பனை அறிவித்து வருகிறது. சீசன் விற்பனை போன்றவற்றில் சலுகை விலையில் பொருட்களை விற்று வருகின்றன. 
 
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் க்ரேட் ரிபப்ளிக் டே விற்பனையை தொடங்க உள்ளது. இன்று முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெற உள்ளது. ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள், பேஷன் மற்றும் அத்தியாவசிய அழகு சாதனங்கள், வீடு மற்றும் சமையல் அறை உபகரணங்கள், அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை இந்த விற்பனை மூலம் வாங்கலாம். 
 
1. ஐபோன் 12 மினி 64 ஜிபி மாடல் விலை ரூ. 59,990 என துவங்குகிறது.  எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 4500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
2. ஒப்போ பைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 13,000 சலுகை அறிவிக்கப்பட்டு ரூ. 51,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
3. ஐபோன் 11 64 ஜிபி மாடல் ரூ. 48,999 விலையில் கிடைக்கிறது. 
4. ஒன்பிளஸ் 8டி 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 43,499 விலையில் கிடைக்கிறது.
5. ஒன்பிளஸ் 8டி 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 40,499 விலையில் கிடைக்கிறது.
6. ஒன்பிளஸ் 7டி ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 38,999 விலையில் கிடைக்கிறது.