Daily Horoscope
✕

"வக்கீல் சாப்" படத்தின் திரை முன்னோட்டம்!

Written By Papiksha Joseph
Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (15:28 IST)
நாளை வெளியாகப்போகும் பிங்க் ரீமேக்  "வக்கீல் சாப்" படத்தின் திரை முன்னோட்டம்!
 
இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற பிங்க் திரைப்படத்தை இப்போது தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் வெளியான பெண்ணிய திரைப்படங்களில் மிக முக்கியமானது 2016 ஆம் ஆண்டு அமிதாப் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம். 
 
இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த அந்த திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் கடந்த ஆண்டு ரிமேக் செய்யப்பட்டது. ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படத்துக்கு பெண்கள் ஆதரவு இந்த படம் மூலம் கிடைத்தது.
 
இந்நிலையில் இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார். அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் மீண்டும் படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழில் தயாரித்த போனி கபூரே தில் ராஜுவுடன் இணைந்து இந்த படத்தையும் தயாரித்துள்ளார். 
 
இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் அஞ்சலி மற்றுன் நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் நாளை  வெளியாகப்போகும் வெளியாகப்போகும் இப்படத்திற்காக டோலிவுட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்தி, தமிழ் போலவே தெலுங்கிலும் இந்த படம் வெற்றி குவிக்குமா என பார்ப்போம்.

எல்லாம் காட்டு

பிரேமலு ஹீரோவை வச்சி படமெடுக்கும் சூர்யா.. விரைவில் அறிவிப்பு...

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில்?

ரஜினி படம்.. அஜித் படம்... நம்ம படத்த என்ன பண்றது?.. குழப்பத்தில் தனுஷ்!...

விஜய் - அஜித்தின் சாதனையை முறியடித்த சூர்யா - ஜோதிகா

அப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு!. அவரை யூஸ் பண்ணமாட்டேன்!.. ஜேசன் சஞ்சய் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments