திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (17:35 IST)

தீரன் அதிகாரம் ஒன்று - முன்னோட்டம்

கார்த்தி நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’, நாளை ரிலீஸாக இருக்கிறது.

 
‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாகவும், ரகுல்  ப்ரீத்சிங் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத்  தயாரித்துள்ளனர். ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்துக்கு, ஜிப்ரான்  இசையமைத்துள்ளார்.
 
தெலுங்கிலும் ‘காக்கி’ என்ற பெயரில் இந்தப் படம் நாளை ரிலீஸாகிறது. இரண்டு மொழிகளிலுமே படத்துக்கு யு/ஏ சான்றிதழ்  கொடுத்துள்ளனர். 2 மணி நேரம் 37 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தப் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது. நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.