1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (07:51 IST)

ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை உயிரிழப்பு!

parangimalai
நேற்று சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை ஒருதலையாக காதலித்த சதீஷ் என்பவர் கல்லூரி மாணவர், சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்தார். இந்த நிலையில் சத்யாவின் தந்தை நெஞ்சுவலியால் திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனது மகள் சத்யா ரயிலில் தள்ளப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சோகத்தில் அவரது தந்தை மாணிக்கம் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 
 
இந்தநிலையில்ஒரே நேரத்தில் தந்தை மகள் என இருவரது இழப்பு அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த கல்லூரி மாணவன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் துரைப்பாக்கத்தில் சதீஷ் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அங்கு சென்ற போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்
 
Edited by Siva