Daily Horoscope
✕

வாரம் முழுவதும் ஏற்றம்.. கடைசி நாளில் திடீரென சரிந்த பங்குச்சந்தை..!

Written By Siva
Updated: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (11:25 IST)
இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த நிலையில் திடீரென இன்று பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் இன்று திடீரென மும்பை பங்குச்சந்தை 270 புள்ளிகள் சரிந்து 74 ஆயிரத்து 762 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 72 புள்ளிகள் சரிந்து 22 ஆயிரத்து 682 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேர்தல் நெருங்கும் வரை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் புதிதாக யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கோல்ட் பீஸ், ஐடி பீஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், சிப்லா, ஐடிசி, கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments