Daily Horoscope
✕

வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை உயர்வு.. இனி ஏற்றம் தானா?

Written By Siva
Updated: திங்கள், 10 ஜூன் 2024 (11:08 IST)
கடந்த வாரம் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று பங்குச்சந்தை படுமோசமாக விழுந்தாலும் அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி செய்த பின்னர் பங்குச்சந்தை உயர்ந்தது என்பதும் இதனால் நஷ்டம் அடைந்த முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று 112 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 85 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 350 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி,  பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments