Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Written By Siva
Updated: வெள்ளி, 12 ஜூலை 2024 (10:01 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,825 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 உயர்ந்து ரூபாய் 54,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,295 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva

எல்லாம் காட்டு

AI அம்சத்துடன் இந்திய நிறுவனமான லாவா விராட் கர்வ்: ரூ. 25,000-க்குள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்!

ரோட்டில் தர்ணா செய்த பிரியங்கா காந்தி.. தரதர என இழுத்து சென்ற டெல்லி போலீஸ்..

தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வராங்களே!.. வைகோ ரியாக்‌ஷன் இதுதான்!..

ரீசார்ஜ் தொகையை உயர்த்திய ஏர்டெல்!.. பயனாளர்கள் ஷாக்

பேரணி நடந்தபோது அசைவம் சாப்பிட்டாரா ராகுல் காந்தி.. பாஜக கிளப்பிய புது சர்ச்சை...

அடுத்த கட்டுரையில்
Show comments