Daily Horoscope

பெரும் ஏற்றத்திற்கு பின் சிறிய அளவில் குறைந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Mahendran
Updated: சனி, 30 மார்ச் 2024 (10:01 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் நேற்று ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்தது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 
 
இந்த நிலையில் தங்கம் விலை பெரும் உயர்வுக்கு பின் இன்று சிறிய அளவில் குறைந்துள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியாக இருந்தாலும் மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து  கிராம் ரூபாய் 6,370 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்  50,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6840 எனவும் ஒரு சவரன் ரூபாய் 54,720 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 81.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments