Daily Horoscope

ஒரு சவரன் 50 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை.. அடுத்தது ஒரு லட்சம் இலக்கா?

Written By Siva
Updated: வியாழன், 28 மார்ச் 2024 (11:16 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் சரியாக ரூ.50000 என்ற இலக்கை தொட்டுள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் என்று தொட வாய்ப்பிருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 35 ரூபாயும் ஒரு சவரனுக்கு 280 ரூபாயும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,250 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்  ரூபாய் 50,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6720  எனவும் ஒரு சவரன் ரூபாய் 53,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 80.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80,500 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments