Daily Horoscope
✕

மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: இன்று ஒரே நாளில் ரூ.320 உயர்வு..!

Written By Siva
Updated: புதன், 19 ஜூலை 2023 (09:45 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5590.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 உயர்ந்து ரூபாய் 44720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6057.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48456.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூபாய் 82.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் 5 பேர் கைது: மீதி 12 பேர் எங்கே?

புழல் சிறையில் அன்பில் மகேஸை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்! என்ன பேசினார்கள்?

தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு பாவளி போனஸ்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!

தீபாவளி ஸ்வீட்டையும் பிளாக்குல வித்திடாதீங்க!.. பழனிச்சாமி நக்கல்!..

கர்நாடகாவில் SIR மூலம் 1 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம்.. காங்கிரஸ் அரசு என்ன செய்ய போகிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments