திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 19 ஜூலை 2023 (07:35 IST)

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் ஒர் வாரம் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காண ப்படும் இடங்களில்  வானிலை மையம் தெரிவித்துள்ளது 
மேலும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது
 
Edited by Siva